Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 10, 2021

கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக் கொண்டு வர ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

சமச்சீர் கல்வியில் கலைஞர் கொண்டு வந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர முதல்வருக்கு கணினி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வெ குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசுப்பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய அரசு மாணவர்களுக்கு கணினி கல்வி தந்த கலைஞர்.

அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தந்து மேல்நிலைப்பள்ளிகளில் 1998ம் ஆண்டு கணினி அறிவியல் பாடத்தை கொண்டுவந்தார்.

அரசுப் பள்ளிகளில்தான் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது கிராமப்புற ஒடுக்கப்பட்ட, ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்குக் கணினிக் கல்வி அவசியம் என எண்ணிஅவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய கணினி அறிவியல் பாடத்திற்கு ஒளியேற்றி தந்தார்.

தமிழகத்தில் கடந்த 2009 -ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மாண்புமிகு கலைஞர் அவர்களால் சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது 6 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தனியார் மாணவர்கள் கற்றுக் கொண்டிருந்த கணினி அறிவியல் கல்வியை அரசு பள்ளி மாணவர்களும் கணினி கல்வி கற்க சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. 2011-12 கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. அதே ஆண்டின் மே மாதம் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சுமார் 28 லட்சம் மாணவர்களுக்கு ரூ.150 கோடியில் அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் ஆட்சி மாற்றம் காரணமாக கணினி பாடப்புத்தகம் மட்டும் இன்று வரை கிடங்குகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

ஏழை மாணவர்களின் கணினி அறிவியல் பாடப்புத்தகம் குப்பைகளாக மாற்றப்பட்டது ஆர்டிஐ அதிர்ச்சி தகவல் தந்துள்ளது. சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டதால் பி.எட் கணினி ஆசிரியர் படிப்பை முடித்த சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அரசுப்பள்ளிகளில் வேலை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால், அரசுப்பள்ளிகளில் பி.எட் படித்த கணினி ஆசிரியர்களுக்கு முந்தய அதிமுக ஆட்சியில் பகுதி நேர ஆசிரியர் பணி கூட கிடைக்கவில்லை.

தமிழக கலைத்திட்டத்தில் ஐந்து பாடம் என்ற நிலைமாறி ஆறாவது பாடமாக கணினி அறிவியல் பாடம் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டது! கணினி அறிவியல் பாடம் இன்றைய காலகட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.இதனை உணர்ந்து 2011ஆம் ஆண்டு கணினி அறிவியல் பாடம் சமச்சீர் கல்வியில் தனி பாடமாக கொண்டுவரப்பட்டது.

No comments:

Post a Comment