Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 14, 2021

நீட் தேர்வில் விருப்பத் தேர்வு முறை அறிமுகம்

நீட் தேர்வு வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டு, விருப்பத்தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 13ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நீட் தேர்வு வினாத்தாளில் விருப்பத்தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இயற்பியல். வேதியியல், தாவரவியல், விலங்கியல் என்று 4 பாடங்களும் SECTION A, SECTION B என்று பிரிக்கப்பட்டுள்ளதாகவும், SECTION A-ல் 35 கேள்விகளும் SECTION B-ல் 15 கேள்விகளும் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், SECTION A-ல் உள்ள 35 கேள்விகளுக்கும், SECTION B-ல் உள்ள 15 கேள்விகளில் 10 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். அதாவது, வினாத்தாளில் உள்ள 200 கேள்விகளில் 180 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். பள்ளிகளில் நேரடி வகுப்பு நடைபெறாததாலும், பாடத்திட்டம் குறைக்கப்பட்டதாலும் விருப்பத்தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment