JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
''ஊரக வங்கி பணியாளர் தேர்வுகள் மட்டுமே, அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்படும்,'' என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலர் நிலை -1 ஆகிய பணிகளுக்கான தேர்வுகள் மட்டும், கொங்கணி மற்றும் கன்னடம் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும்.
மற்ற வங்கித் தேர்வுகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே, நடத்தப்படும்.பொதுத்துறை நிறுவனங்களில் பிராந்திய மொழிகளில், தேர்வு நடத்தப்படுவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு 15 நாட்களுக்குள் பரிந்துரைகளை வழங்கும்.
அதுவரை வங்கியில் ஆள்சேர்ப்பு நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ள, தேர்வு நடைமுறை நிறுத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment