Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 27, 2021

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகிறது.!

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போனது. இதனையடுத்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கு உண்டான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த ஆட்சி காலத்தில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே பழனிசாமி ஒரு அதிரடி சட்டத்தை இயற்றினார். அதன்படி, அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பித்து சட்டம் இயற்றினார்.

இந்த சட்டம் காரணமாக கடந்த 2020 -21 கல்வி ஆண்டில் தமிழக அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டோர் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.

இந்த நிலையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை மேலும் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கும் இந்த மருத்துவ படிப்பில் சேருவதற்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைவிட முக்கியமாக வெளியான தகவல் என்னவென்றால், தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பணம் படைத்தவர்கள் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதும், பணம் இல்லாத ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசு பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பது வழக்கமான ஒன்று.

இந்த நிலையில், ஏழை மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அனைத்து தரப்பு மக்களும் முன்வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment