JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஜுலை மாத அலகுத் தேர்வு நடைபெறும் கால அட்டவணை மற்றும் நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செய்தி.
தேர்வு நடைபெறும் அன்று காலை 9.30 மணிக்கு தேர்விற்கான வினாத்தாளினை மாணவர்களுக்கு Whats app மூலம் அனுப்புதல் வேண்டும் .
அலகுத் தேர்விற்கான நேரம் காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படவேண்டும்
ஒவ்வொரு அலகுத் தேர்விற்கான வினாத்தாட்களை இவ்வலுவலக மின்னஞ்சல் / Whats app மூலமாக சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் . மாணவர்கள் வினாத்தாள் பெறுவதில் சிரமம் இருப்பின் , தலைமையாசிரியர்கள் மாற்று ஏற்பாடு மேற்கொள்ளவேண்டும்.
தேர்வு முடிந்த உடன் தேர்வு குறித்த மதிப்பீடு செய்து பெற்ற பகுப்பாய்வு முடிவை உடன் தலைமையாசிரியர்கள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.
மாணவர்கள் நல்ல முறையில் பயிற்சி எடுத்து தேர்வை எழுத ஆசிரியர்கள் மூலம் ஊக்கப்படுத்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
SSLC AND HSE +2 PRACTICE TEST TIME TABLE FOR JULY - 2021 - Download pdf file...
No comments:
Post a Comment