Thursday, July 8, 2021

ஐ.டி.ஐ., கல்லுாரியில் சேர விண்ணப்பிக்கலாம்

அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்' என, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:செங்கல்பட்டு மாவட்டம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும், செங்கல்பட்டு அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை தொடர்பான கலந்தாய்வுக்கு, வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அரசு இட ஒதுக்கீட்டில், காலியிடங்களை நிரப்பும் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில், 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

செங்கல்பட்டு, பெரும்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், விண்ணப்பங்கள் இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்வது குறித்து 94990 55673, 99629 86696 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்புகொண்டு அறியலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.