Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, July 19, 2021

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) சாதிச் சான்றிதழ் வழங்குதல் - அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம்!

இந்திய அரசு பணியிடங்களுக்கான நியமனங்கள் மற்றும் ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கையில் 27 % இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ( OBC ) வளமான பிரிவினரை ( creamy layer ) நீக்கி வழங்கப்படுகிறது . தமிழ்நாட்டிற்கான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் இந்திய அரசால் அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது . மேலும் , வளமான பிரிவினரை நீக்குவதற்கான நெறிமுறைகளும் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது . வளமான பிரிவினரை நீக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பை கணக்கிடும் போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தைச் சேர்க்கக்கூடாது என வழிகாட்டு நெறிமுறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது . 1993 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ .1 லட்சத்திலிருந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு ரூ .8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது.

2. மேற்சொன்ன ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சாதி சான்றிதழ் வழங்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இருப்பினும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிச் சான்றிதழ் பெறுவதில் சிரமம் இருப்பதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது . இதனால் இந்திய அரசின் 27 % இட ஒதுக்கீட்டின் கீழ் பயன் பெற இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது.

3. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதி சான்றிதழ் வழங்கப்படுவது குறித்து இந்திய அரசின் அலுவலக குறிப்பாணைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகின்றன. இந்த அலுவலக குறிப்பாணைகளில் காணும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தகுதியான நபர்களுக்கு வளமான பிரிவினரை நீக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ .8 இலட்சம் என்ற பெற்றோரின் ஆண்டு வருமானத்தை கணக்கிடும் பொழுது ஊதியம் மற்றும் விவசாயம் ஆகியவற்றிலிருந்து பெறுகின்ற வருமானத்தை கணக்கில் கொள்ளப்படாமல் , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதி சான்றுகளை கால தாமதம் இன்றி வழங்கும்படி சாதி சான்று வழங்கும் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

4. பார்வை 1 மற்றும் 4 இல் கண்ட குறிப்பாணைகளில் குறிப்பிட்டுள்ள இனங்களை தவிர்த்து ஏனைய இனங்களுக்கு , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதிச் சான்றிதழ் வழங்கும் பொழுது வளமான பிரிவினரை நீக்கம் செய்வது தொடர்பாக பெற்றோரின் ஆண்டு வருமானம் கணக்கிடுவது குறித்த விளக்கங்கள் ( Illustrations ) தகவலுக்காக இணைக்கப்பட்டுள்ளன.

5. இந்த அரசு கடிதம் பெற்றுக் கொண்டதற்கு ஒப்புகை அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment