ஆன்லைனில் TRB தேர்வுகள் நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Saturday, July 31, 2021

ஆன்லைனில் TRB தேர்வுகள் நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..!

TRB தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆன்லைனில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து,அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு,தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.மேலும்,TET,TRB தேர்வுகளும் நடத்தப்படவில்லை.இதனையடுத்து,கடந்த 2 ஆண்டுகளாக எந்த தேர்வுகளும் நடத்தப்படாமல் உள்ளது.

இந்நிலையில்,ஒத்திவைக்கப்பட்டுள்ள TRB தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை End To End Encrypted என்ற முறையில் ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அதன்படி,அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை,அறிவியல் கல்லூரிகளில் உள்ள கணினி ஆய்வகங்களில் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,TET,பாலிடெக்னிக் விரிவுரையாளர்,உதவி பேராசிரியர் போன்ற தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad