JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழக வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் நேற்று நெல்லையில் ஆய்வு நடத்தினார். பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி: பட்டா தொடர்பாக தவறுகள் இருந்தால் அந்தந்த சப்.கலெக்டர்கள், ஆர்டிஓக்கள் வாரம் ஒருமுறை ஒவ்வொரு தாலுகாவிற்கும் சென்று அந்தக் குறையை தீர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. நில அளவை பணிகளுக்கு 3 மாதம், 4 மாதம் என காத்திராமல் உடனே சர்வே செய்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் விரிவாக்கம் செய்யவும், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதே தவிர, தாலுகாக்கள், கோட்டங்கள் பிரிக்கப்படவில்லை. இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளேன். இதற்காக முதல்வரிடமும், நிதித்துறையிடமும் தகுந்த ஆணை பெற்று பிரிக்கப்படும். தமிழகத்தில் விஏஓக்கள் காலி பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை கேட்டுள்ளோம். கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியிடங்களை நிரப்ப முடியாத சூழ்நிலை உள்ளது. காலி பணியிடங்கள் நிரப்பப்படும். இதுபோல் கிராம உதவியாளர் பணியிடங்கள் 3 ஆயிரம் காலியாக உள்ளது. இந்தப் பணியிடங்களும் விரைவில் நியமனம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment