JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அன்றைய தினத்திலிருந்தே கல்லூரிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தினசரி வகுப்புகள் நடைபெறும் எனவும், 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு போதிய இடவசதி இல்லை என்றால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான தமிழக அரசின் அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
1. வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளி வேலை நாட்கள்
2. 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி வகுப்புகள் நடைபெறும்
3. ஒவ்வொரு வகுப்பிலும் 20 மாணவர்கள் மட்டுமே சமூக இடைவெளியை பின்பற்றி அமரவைக்க வேண்டும்.
4. போதிய இடவசதி இல்லையென்றால் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படவேண்டும்
5. உயர்நிலை பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பு தினமும் செயல்பட வேண்டும். போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் மட்டும் 9ம் வகுப்பு சுழற்சி முறையில் நடத்தப்படவேண்டும்
6. தனியார் பள்ளிகளில் மட்டும் வகுப்புக்கு வர இயலாத மாணவர்களுக்கு தொடர்ந்து இணையவழி வகுப்புகள் நடத்தப்படவேண்டும்
7. மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்
8. வகுப்புகள் செல்லும் முன் மாணவர்கள் கிருமிநாசினி, சோப் பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்த வேண்டும்
9. பள்ளிக்கு வருகை புரிவதிலிருந்து விலக்கு பெற்ற ஆசிரியர்கள் செப் 1 முதல் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்.
10. தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
11. PET, NSS, NCC தொடர்பான செயல்பாடுகள் பள்ளி வளாகத்தில் செயல்படுதல் கூடாது
No comments:
Post a Comment