Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, August 23, 2021

10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

'பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி சான்றிதழை, இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் படித்த அனைத்து மாணவர்களுக்கும், கடந்த கல்வியாண்டில், பொதுத்தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, முந்தைய வகுப்புகளின் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில், அவர்களுக்கு மதிப்பெண் இல்லாமல் தேர்ச்சி சான்றிதழ் மட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தற்காலிக தேர்ச்சி சான்றிதழ், இன்று முதல் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

அரசு தேர்வு துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தற்காலிக தேர்ச்சி சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.

வரும் 31ம் தேதி வரை சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளதாக, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment