JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட போது புதிதாக பிரிக்கப்பட்ட விழுப்புரம், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கு வாக்குப்பதிவு நடத்தப்படவில்லை. மேற்கண்ட மாவட்டங்களில் செப்டம்பர் மாதத்துக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் படி, 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாரானதுடன்,. அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் வாக்குப்பதிவு அலுவலர்களை நியமனம் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடிய பணியாளர்களுக்கு பயிற்சி, தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான பயிற்சி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யும்படி, மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment