தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு விரைவில் பள்ளிகள் திறப்பு .! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Monday, August 2, 2021

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு விரைவில் பள்ளிகள் திறப்பு .!

தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 61ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 102ஆக உள்ளது. இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக தற்போது வரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரைவில் வகுப்புகள் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளதால் வகுப்பறைகளை தயார் செய்தல், கற்றல்-கற்பித்தல் பணிகளுக்காக அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிந்துள்ளனர்.

நான்கு மாதத்திற்கு பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் இன்று மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளனர். அத்துடன் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப்பில் குழு ஆரம்பிக்கப்பட்டு அலகு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்திய நிலையில் வருகின்ற 6ம் தேதி வாட்ஸ்அப் வழியாக அலகு தேர்வு நடத்துவதற்கான பணிகளையும் ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad