பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Wednesday, August 4, 2021

பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்தியாவின் முதன்மை மின்னணுவியல் நவரத்னா நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 511 டிரெய்னி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Trainee Engineer -I

காலியிடங்கள்: 308

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 2 5க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.25,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.28,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.31,000 வழங்கப்படும்.

பணி: P roject Engineer-I

காலியிடங்கள்: 203

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: முதலாம் ஆண் மாதம் ரூ.35,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.40,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.45,000, நான்காம் ஆண்டு மாதம் ரூ.50,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: பிஇ, பி.டெக் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவங்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: Trainee Engineer -I பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.200, Project Engineer-I பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bel-india.inஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.08.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web-advt-English-03-08-2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

Post Top Ad