Join THAMIZHKADAL WhatsApp Groups
செவிலியா் பட்டயப் படிப்புக்கு (டிப்ளமோ) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து கா்நாடக மாநில செவிலியா் பட்டயத் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடக மாநில செவிலியா் பட்டயத்தேர்வு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியாா் செவிலியா் கல்லூரிகளில் 2021-22-ஆம் கல்வியாண்டில் செவிலியா் பட்டயப்படிப்பு (டிப்ளமோ) படிக்கவிரும்பும் மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனியாா் செவிலியா் கல்லூரிகளில் 10 சதம் மட்டுமே அரசு இடஒதுக்கீட்டில் வரும்.
இரண்டாம் ஆண்டு பியூசி தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் (தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு 35 சதவீதம்) பெற்றிருக்கும் மாணவா்கள், இணையதளத்தின் மூலம் ஆக.13 முதல் ஆக.31-ஆம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்படிவ கட்டணமாக ரூ.400-ஐ (தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு ரூ.250) பெயரில் வங்கி வரைவோலை எடுத்துஅனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment