Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளிகள் திறந்த உடன் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக பாரத சாரண சாரணியர் இயக்கம் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் இந்த இயக்கத்தை அதிகப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு விட்டனர். இருப்பினும் பள்ளிகள் திறக்க உள்ள சூழலில் தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் இரு தவணை தடுப்பூசி போட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் சுகாதார அமைச்சரிடம் தடுப்பூசி போடுவதில் அரசு ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்கான பணியை விரைந்து முடிக்கப்படும்.
பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டாலும் மாணவர்கள் அடிப்படையில் தெரிந்து கொள்ள தேவையான அனைத்து பாட பகுதிகளும் ஆசிரியர்களின் சார்பில் கற்றுக் கொடுக்கப்படும்.
கொரோனா காலகட்டத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாத நிலையில் விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்..
50% முதல் 60 % வரை பாடத்திட்டம் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது மாணவர்களின் மனரீதியான பலுவை குரைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட செயல் எனக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment