தமிழ்நாட்டில் வரும் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.
இத்தகைய சூழலில் தமிழகத்தில் கொரோனா குறைந்துள்ளதால் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 1 முதல் முதல் அனைத்து வகுப்பினருக்கும் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.
வகுப்பறைகளில் மாணவர்கள் இருக்கைகள் இடைவெளி, இடைவெளியுடன் மாணவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும், பள்ளிவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)