Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 21, 2021

நீட் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்கள் விவரம் வெளியீடு

நீட்தேர்வுஎழுதும்மாணவர்கள்அவர்களுக்கான மையம் பற்றி தெரிந்துக்கொள்ள தகவல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது .

செப்டம்பர் 12 ஆஆம் தேதி மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடைபெறவுள்ளது . 198 நகரங்களில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறவுள்ளது . ஜூலை 13 ஆம் தேதி முதல் நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கி ஆக்ஸ்ட் 10 வரை நடைபெற்றது .

அதன்பிறகு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு 14 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது . இந்நிலையில் நீட் தேர்வுக்கான தேர்வு மையம் பற்றிய தகவலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது .
தேர்வர்கள் , தாங்கள் தேர்வு எழுதப் போகும் மையம் பற்றிய தகவலை https://neet.nta.nic.in இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் . மேலும் , OMR தாளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது பற்றிய தகவலையும் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதப் போகும் மையம் பற்றிய தகவலை முன்கூட்டியே அறிந்துகொள்ள தேசிய தேர்வு முகமை ஏற்பாடு செய்துள்ளதாகவும் , தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளது .

முன்னதாக தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வை எழுத கடந்த ஆண்டில் 1,21,617 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் , நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,12,890 ஆக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment