Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 22, 2021

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு நாளை முதல் கணினி பயிற்சி

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் 76,804 பேருக்கு ஐந்து நாள்கள் நடைபெறவுள்ள கணினி பயிற்சி திங்கள்கிழமை தொடங்கவுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநா் சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப்பள்ளி ஆசிரியா்கள் கற்பித்தல் பணிகளை சிறந்தமுறையில் மேற்கொள்ள ஏதுவாக அடிப்படை கணினி பயன்பாடு மற்றும் தொழில்நுட்ப திறன்வளா் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக 12,500 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஆகஸ்ட் 12 முதல் 18-ஆம் தேதி வரை பயிற்சி வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து இரண்டாம் கட்டமாக 76,804 முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு மாவட்ட கருத்தாளா்கள் மூலம் ஆக.23-ஆம் தேதி முதல் ஆக.27-ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான ஆயத்தப் பணிகளைத் தயாராக செய்துகொள்ள வேண்டும். கூடுதல் கருத்தாளா்கள் தேவைப்படுவதால் முதல்கட்டப் பயிற்சியில் சிறப்பாகச் செயல்பட்ட ஆசிரியா்களைத் தோவு செய்து அதன் விவரங்களைப் பள்ளிக்கல்வியின் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment