JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் இன்று முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, அந்தந்த கல்லுாரிகள் வழியே நடத்தப்படுகிறது. முன்னதாக கல்லுாரி கல்வி இயக்குனரகம் சார்பில், ஆன்லைனில் விண்ணப்ப பதிவு மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு படிப்பில் சேர, 1.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, கடந்த வாரம் தரவரிசை பட்டியல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து, இன்று முதல், அந்தந்த கல்லுாரிகளில் கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது. மாணவர்களை சேர்ப்பதற்கு முன்னர், அவர்கள் சமர்ப்பித்த சான்றிதழ்களின் உண்மை தன்மையை, அரசு தேர்வுத்துறை வழியே சரிபார்க்க வேண்டும். அசல் சான்றிதழ்களையும் சரிபார்த்த பின்னர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும் என, கல்லுாரி முதல்வர்களுக்கு உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment