JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஆசிரியர்கள் வருகையை TN EMIS Mobile App ல் பதிவு செய்ய திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.
அனைத்து அரசு , அரசு நிதியுதவி சார்ந்த தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது . கடந்த 02.08.2021 முதல் தினந்தோறும் வருகை புரியும் ஆசிரியர்களின் வருகையை TN EMIS mobile app இல் காலை 10.00 மணிக்குள் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கலாகிறது.
மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கண்டவாறு அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் வருகையினை தினந்தோறும் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களால் பதிவு செய்யப்படுகிறதா என்பதனை உறுதி செய்து கொள்ளுமாறும் , இப்பணிக்கு வட்டார கல்வி அலுவலர்கள் , பள்ளி துணை ஆய்வாளர்கள் , மேற்பார்வையாளர்கள் , மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோரைக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment