செப். 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் - பள்ளிகள் தயார் நிலையில் இருக்க உத்தரவு. - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Friday, September 10, 2021

செப். 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் - பள்ளிகள் தயார் நிலையில் இருக்க உத்தரவு.

தமிழ்நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று ‘மெகா கொரோனா தடுப்பூசி முகாம்’ 40,000 மையங்களில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாட்டு மக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் 12.09.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40,000 மையங்களில் நடைபெற உள்ளது. இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி அளிக்க இலக்கு நிர்ணயித்து அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது.

ICDS, NGOs, வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், (கிராம மற்றும் நகர), கல்வித்துறை, யுனிசெப், WHO மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் கோவிட் தடுப்பூசி முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.

முக்கிய அம்சங்கள்:

1. கோவிட் தடுப்பூசி வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்படும்.

2. ஒவ்வொரு மையத்திலும் போதிய பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.

3. 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் நபர்களுக்கு 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை கோவிட் தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4. தடுப்பூசி செலுத்திய பிறகு ஏதாவது பின்விளைவுகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அனைத்து மையங்களிலும் AEFI Kit தயார் நிலையில் வைக்கப்படும்.

5. அனைத்து மாவட்டங்களிலும் Task Force, Micro Planning, Supervisor Training, Vaccinator Training நடத்தப்பட்டுள்ளது.

6. தேவையான IEC (Poster, Banner, Miking) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7. கோவிட் சிறப்பு முகாமில் பாதுகாப்பான முறையில் நடைபெற கோவிட் -19 நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.

8. சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கைகழுவுதல் கட்டாயமாகும்.

9. தடுப்பூசி கொடுக்கும் முன் சோப்பைக் கொண்டு கைகழுவுவது / Sanitizer உபயோகப்படுத்துவது கட்டாயமாகும்.

10. பெரியவர்களுக்கு காய்ச்சல் / இருமல் அல்லது மற்ற கோவிட் தொற்று தொடர்பாக இருந்தால் மையங்களில் அனுமதிக்கக் கூடாது.

11. மையங்களில் கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி பெறுபவர்களுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

12. பயனாளிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களை எடுத்து வரவேண்டும்.

13. நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதிகள், தொலை தூரப்பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களை ஒட்டிய பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படும்.

14. பிற இலாக்காகளைச் சார்ந்த வாகனங்கள் இந்த முகாமில் ஈடுபடுத்தப்படும்.

15. சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

16. அனைத்து மையங்களிலும் போதுமான காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படும்.

17. தேவையான தடுப்பூசி, சிரஞ்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

18. மாநில/ மாவட்ட/வட்டார அளவில் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

19. மூன்றாவது அலையை தவிர்ப்பதற்காகவும், கொரோனா நோயிலிருந்து விடுபடவும், கோவிட் வைரஸில் இருந்து பாதுகாப்பு பெறவும் மெகா கோவிட் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசின் பெரும் முயற்சியின் விளைவாக, ஒன்றிய அரசிடமிருந்து போதுமான தடுப்பூசி பெறப்பட்டுள்ளது.

அனைத்து மக்களும் இந்த மெகா தடுப்பூசி முகாமினை சிறந்த முறையில் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.”

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad