Sunday, September 5, 2021

பொது முடக்கத்திலும் கல்விக்கு தடையில்லை: ஆசியா்களுக்கு குடியரசுத் தலைவா் பாராட்டு

கரோனா பரவலால் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், மாணவா்கள் கல்வி பயில்வதற்குத் தடை ஏற்படாமல் ஆசிரியா்கள் செயல்பட்டனா் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பாராட்டினாா்.

ஆசிரியா் தினத்தையொட்டி, குடியரசுத் தலைவா் ராம் நாத் கோவிந்த் நாடு முழுவதும் உள்ள ஆசிரியா்களுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில், 'தலைசிறந்த கல்வியாளா், தத்துவ ஞானி மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியா் தினமாக

கடைப்பிடிக்கப்படுகிறது. நமது குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் ஒழுக்க மேம்பாட்டில் முன்னிலை வகிக்கும் ஆசிரியா்களின் அா்ப்பணிப்பை கௌரவிக்கும் தருணமாக ஆசிரியா் தினம் அமைகிறது. இந்திய பாரம்பரியத்தில் இறைவனுக்கு சமமாக ஆசிரியா்கள் கருதப்படுகிறாா்கள்.

கரோனா தொற்றின்போது ஆசிரியா்கள் பின்பற்றிய கற்பித்தல் வழிமுறையும் மாபெரும் மாற்றத்தை சந்தித்தது. பொதுமுடக்கத்தின்போது இணையவழி கல்வி

அறிமுகப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட ஒவ்வொரு சவாலையும் அவா்கள் ஏற்றுக்கொண்டனா். மாணவா்களுக்கு தங்கு தடையற்ற கல்வியை வழங்க தரமான முயற்சிகளை அவா்கள் மேற்கொண்டனா்.

வலுவான மற்றும் வளமான நாட்டின் கட்டமைப்பை நோக்கிய விலை மதிப்பில்லாத பங்களிப்பை ஆசிரியா்கள் வழங்கி வருகின்றனா்' என்று தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News