JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கணினிப் பயிற்றுநர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில், அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினிப் பயிற்றுநர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாகத் தேர்வு செய்யப்பட்ட 52 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 3 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி காகர்லா இ.ஆய. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் திரு. க. நந்தகுமார், இ.ஆ.ப, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment