Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 11, 2021

10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பிஎச்டி பாடப் பிரிவுகள் தொடக்கம்: உயர்கல்வித் துறை அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பிஎச்டி பாடப்பிரிவுகள் தொடங்க உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள் ளது. இதுதொடர்பாக உயர்கல்வித் துறை செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணை:

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முனைவர் பட்ட ஆராய்ச்சிப்படிப்புகளை (பிஎச்டி) மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர்பொன்முடி ஆக.26-ல் அறிவித்தார்.

அதன்படி, 2021-22 கல்வி ஆண்டு முதல் செங்கல்பட்டு இரா.வே. அரசு கலைக் கல்லூரி (வணிகவியல்), சேலம் அரசு கலைக் கல்லூரி (தாவரவியல்), கோவை அரசு கலைக் கல்லூரி (தகவல் தொழில்நுட்பம்), நாமக்கல் அறிஞர் அண்ணா அரசுகலைக் கல்லூரி (விலங்கியல்), திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரி (உயிர் வேதியியல்), திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி, சென்னை நந்தனம் அரசுஆண்கள் கலைக் கல்லூரி (ஆங்கிலம்), கும்பகோணம் அரசு மகளிர்கலைக் கல்லூரி (இயற்பியல்), கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி (தமிழ்), திருப்பூர்சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி(சர்வதேச வணிகம்) ஆகிய 10 கல்லூரிகளில் பிஎச்டி பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதிக்கப்படுகிறது.

கல்லூரியில் ஏற்கெனவே பணியாற்றும் முதுநிலை உதவி பேராசிரியர்கள் பிஎச்டி பாடப் பிரிவுகளை கையாள்வதற்கும் அனுமதிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment