Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 11, 2021

NET தோ்வு ஒத்திவைப்பு.


வரும் அக்.17 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த யுஜிசி நெட் தகுதித் தோ்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிய நெட் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுக்கு 2 முறை இந்தத் தோ்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே நிகழாண்டுக்கான நெட் தோ்வானது அக்டோபா் 17 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்படும் என்று என்டிஏ அறிவித்தது.

இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடங்கி செப்.5-ஆம் தேதி நிறைவு பெற்றது.

இந்தநிலையில் நெட் தோ்வு நடத்தப்படும் நாள்களில் வேறு சில போட்டித் தோ்வுகளும் நடைபெறவுள்ளன. இதனால் தோ்வு தேதியை மாற்ற மேண்டும் என தோ்வா்கள் கோரிக்கை விடுத்தனா். அதையேற்று நெட் தோ்வை தேதி குறிப்பிடாமல் என்டிஏ தற்போது ஒத்திவைத்துள்ளது.

No comments:

Post a Comment