மாதம் ரூ.500 முதலீட்டில் வாழ்நாள் முழுவதுக்குமான ஓய்வூதியம் – SBI புதிய திட்டம்! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Tuesday, October 5, 2021

மாதம் ரூ.500 முதலீட்டில் வாழ்நாள் முழுவதுக்குமான ஓய்வூதியம் – SBI புதிய திட்டம்!

பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 செலவில் வாழ்நாள் முழுவதுக்குமான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

ஓய்வூதிய திட்டம்:

தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது PFRDA ஆல் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை இணைக்கப்பட்ட வருவாயை வழங்கும் மிக குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்ட ஒரு நீண்ட கால முதலீடு திட்டம் ஆகும். வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்த விரும்பும் தொகையினை தேசிய ஓய்வூதிய திட்டத்தின் விண்ணப்பத்தினை சமர்பிப்பதன் மூலம் தங்களின் அருகில் உள்ள SBI கிளையில் சேரலாம். அதில் இரண்டு வகையான கணக்குகள் உள்ளது. ஒரு ஓய்வூதிய கணக்கில் வரி சலுகை உள்ளது மற்றும் இரண்டாவது கணக்கில் வரி சலுகை இல்லை. ஆனால் ஆனால் ஒரு நிதியாண்டில் எந்த நேரத்திலும் 50 ஆயிரம் ரூபாய் தொகையினை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

எஸ்பிஐ தற்போது தேசிய ஓய்வூதிய தினத்தை கொண்டாடாடுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தை பயன்படுத்தி கொள்ளும் வகையில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான ஓய்வூதியத்தை உறுதி செய்ய முதலீட்டின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக என்.பி.எஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இளம் வயதில் முதலீடு செய்யும் நபர் இதன் மூலம் அதிக நன்மைகளைப் பெறுவார்கள் என்றும், எஸ்பிஐயின் என்பிஎஸ் திட்டத்தை தேர்வு செய்யும் போது கூடுதல் நன்மைகளைப் பெறலாம் என்று ட்வீட் செய்துள்ளார்.

திட்டத்தில் சேரும் முறை:

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் எஸ்பிஐ யோனோ மற்றும் ஆன்லைன் என்ற இரண்டு முறைகளில் சேரலாம்.

யோனா:

 • முதலில் நீங்கள் யோனோ செயலுக்கு செல்ல வேண்டும்.
 • அதில் முதலீடு பகுதியை தரவு செய்ய வேண்டும்.
 • இப்பொழுது, NPS கணக்கைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்ய வேண்டும்.
 • அங்கு கேட்கப்படும் தேவையான விவரங்களை பதிவு செய்யப்பட்டவுடன் உங்கள் கணக்கு செயல்படுத்தப்படும்.
ஆன்லைன்:
 • முதலில், https://onlinesbi.co.in என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
 • அதில், ‘இ-சேவைகள்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
 • இப்பொழுது, NPS பதிவு அல்லது அருகில் உள்ள SBI கிளை விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
 • உங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பு பலன்கள்:
 • ஓய்வூதிய கணக்கில் குறைந்தபட்சம் ரூ .500 மற்றும் முதலீட்டு கணக்கில் குறைந்தபட்சம் ரூ.1,000
 • இந்த திட்டம் 18 முதல் 70 வயதுடைய குடிமக்களுக்கு கிடைக்கிறது.
 • 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயது வரை மொத்த வைப்புத் தொகை ரூ .2 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் வாடிக்கையாளர் முழுத் தொகையையும் திரும்ப பெறலாம்.
 • ஓய்வூதியத்திற்குப் பிறகு இந்தத் திட்டத்தில் தொடரவும், 70 வயது வரை ஒத்திவைக்கவும் ஒரு வசதி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad