Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, October 5, 2021

PAN Card தொலைந்து விட்டதா? 5 நிமிடத்தில் ஆன்லைனில் பெற்றுக்கொள்ள எளிய வழிமுறை!

ஒரு தனிமனிதனின் அடையாள ஆவணமாக கருதப்படும் பான் கார்டுகளை பயனர் ஒருவர் தொலைத்து விட்டால் அதனை எளிதில் பெற்றுக்கொள்ளும் வகையில் சில வழிமுறைகளில் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பான் கார்டுகள்

இப்போதெல்லாம் ஆதார் அட்டைகளை போலவே பான் கார்டுகளும் அனைத்து வகையான சேவைகளுக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக வங்கி கணக்கு திறத்தல், PF கணக்குகள் துவங்குதல் போன்ற அனைத்திற்கும் ஆதார் அட்டைகளுடன் பான் எண்ணும் முக்கியமான ஆவணமாகும். இவை சில சமயங்களில் அடையாள ஆவணமாகவும் கூட பயன்படுகிறது. இந்த பான் கார்டுகள் ஒருவேளை தொலைந்து விட்டால் அதற்காக ஒருவரும் அச்சப்பட தேவையில்லை.

இப்போது நீங்கள் இருக்கும் இடங்களில் இருந்தபடியே ஒரு 5 நிமிடங்களுக்குள்ளாக பான் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்காக,

· https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html என்ற இணையதளத்தை திறக்கவும்.

  • இப்போது PAN விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • தேவையான விவரங்களை பதிவிடவும்.
  • இந்த விவரங்களை பூர்த்தி செய்த பிறகு, அறிவிப்பு பெட்டியை டிக் செய்து கேப்ட்சா குறியீட்டை கொடுத்து சமர்ப்பிக்கவும்.
  • இப்போது PAN அட்டைக்கு தேவையான அனைத்து விவரங்களும் முகப்பு பக்கத்தில் தோன்றும்.
  • தொடர்ந்து பான் சரிபார்ப்புக்காக ஏதேனும் ஒரு செயல்பாட்டை கிளிக் செய்யவும்.
  • மீண்டுமாக அறிவிப்பு பெட்டியை டிக் செய்து, OTP ஐ உருவாக்கு என்று கொடுக்கவும்.
  • இப்போது கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும்.
  • அந்த OTP எண்ணை பதிவிட்டு Validate என்பதை கிளிக் செய்யவும்.
  • தொடர்ந்து Continue With Paid E-PAN டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • கட்டண விவரங்களை தேர்வு செய்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை டிக் செய்யவும்.
  • இப்போது கட்டணத்தை உறுதிப்படுத்தும் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • தொடர்ந்து பணம் செலுத்தும் பக்கம் தோன்றும்.
  • அதில் ரூ.9 மட்டும் செலுத்தவும்.
  • இந்த பணத்தை செலுத்திய பிறகு, continue கொடுக்கவும்.
  • கட்டணதிற்கான ரசீதை உருவாக்கியவுடன் நீங்கள் டவுன்லோட் E PAN ஐ கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது உங்கள் E pan கார்டு, மொபைல் அல்லது கணிப்பொறியில் பதிவிறக்கம் ஆகும்.

No comments:

Post a Comment