Tuesday, October 26, 2021

இல்லம் தேடிக் கல்வி - தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்க ( RP ) ஆசிரியர்கள் EMIS இணையத்தில் பதிவு செய்யலாம்!

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

கொரோனா பெருந்தோற்று பரவல் காரணமாக 1 முதல் 8 - ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி / இழப்பையும் சரிசெய்யும் விதமாக தன்னார்வலர்களை கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ள " இல்லம் தேடிக் கல்வி " என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது . இத்திட்டத்திற்காக பணியாற்றவுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியில் கருத்தாளர்களாக செயல்பட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் EMIS இணையதளத்தில் அவர்களுடைய staff login- ல் உள்ள ITK RP's option- ஐ பயன்படுத்தி , தங்கள் விருப்பம் மற்றும் விருப்பமின்மைக்கான விவரத்தினை தவறாமல் 28.10.2021 - க்குள் பதிவிட வேண்டும். இத்தகவலை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்து உரிய விவரங்களை பதிவேற்றம் செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

கல்விச் செய்திகள்

Featured News