Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 25, 2021

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு தள்ளிவைப்பு! - அமைச்சர் பொன்முடி!


தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்வர்கள் அருகிலுள்ள மையங்களிலேயே தேர்வு எழுதும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்படும் என தெரிவித்தார்.

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தேர்வு வரும் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், தேர்வு மையங்கள் அருகிலேயே அமைக்க தேர்வர்கள் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், தேர்வர்களின் அருகிலுள்ள மையங்களிலேயே தேர்வு எழுத வசதியாக புதிய அரசாணை வெளியிட்டு, 129 மையங்களில் தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment