Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, November 9, 2021

TRB - முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மேலும் நீட்டிப்பு.


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-2021 ஆம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் .01 / 2021 நாள் 09.09.2021 முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது . இந்நிலையில் தற்போது , தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக இணையவழியாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்வதில் சில சிரமங்கள் உள்ளதால் மேற்காண் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 09.11.2021 லிருந்து 14.11.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என TRB அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment