JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஆயுர்வேதம் மற்றும் யோகா அடிப்படையிலான பாடத்திட்டத்தை பள்ளி கல்வியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறியுள்ளார்.மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் கூறியதாவது: மழலையர் வகுப்புகள் உள்பட 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வியில் இந்த பாடத்திட்டத்தை சேர்க்கும் வரைவு பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறை அமைத்துள்ள தேசிய கல்விக் கொள்கை செயல்பாட்டுக் குழுவில் ஆயுஷ் அமைச்சகத்தின் நிபுணர்களும் உள்ளனர். கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி நடைபெற்ற செயல்பாட்டுக்குழுவின் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது தொடர்பான ஆயுஷ் அமைச்சகத்தின் நடவடிக்கை அறிக்கை பகிர்ந்து கொள்ளப்பட்டது.
நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தில் உள்ள தேசிய ஆயுர்வேத நிறுவனம் இதற்கான பாடத்திட்டத்தை வகுத்துள்ளது.
No comments:
Post a Comment