Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, December 22, 2021

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நம்மைக் காக்கும் 48 - திட்டத்தினைச் செயல்படுத்தி அரசாணை வெளியீடு!

இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் - சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நம்மைக் காக்கும் 48 என்ற புதிய திட்டத்தினைச் செயல்படுத்தி அரசாணை வெளியீடு!

ஆணை : தமிழ்நாடு அரசு அனைத்து மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் , ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக இலவச மருத்துவச் சேவைகளை செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் பின்வருமாறு தெரிவித்துள்ளார் :

" மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 18-11-2021 அன்று தலைமைச் செயலகத்தில் , சாலைப் பாதுகாப்பு குறித்தும் , சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கும் சாலை உயிரிழப்புகளைத் தடுப்பதற்கும் , தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது . அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் , சாலைகளின் வடிவமைப்பு குறித்தும் , காவல்துறை உள்ளிட்ட பொதுமக்களுக்கு முதலுதவி பயிற்சி அளிப்பது , சாலை விபத்துகள் குறித்து சிறப்பு சட்டங்கள் இயற்றுவது , புதிய தொழில் நுட்பங்கள் செயல்படுத்துவது குறித்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரிவாக இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டு . அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களைக் கண்டறிந்து , ஆய்வுசெய்து , விபத்துகளைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

மேலும் , சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு , முதல் 48 மணிநேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவைத் தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில் , " நம்மைக் காக்கும் 48 " - அனைவருக்கும் முதல் -2 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கட்டணமில்லா மருத்துவ உதவித் திட்டத்தினைச் செயல்படுத்த ஆணையிட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment