Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, December 5, 2021

பள்ளி நூலகங்களை முறையாக பயன்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

நூலகங்கள் மாணவர்களின் அறிவையும் ஆற்றலையும் பெருக்கும் பேராதாரமாகும். நாடு போற்றும் பெரிய தலைவர்கள் பாட நூல்களுக்கு அப்பால் தங்கள் பள்ளிகளில் உள்ள இருப்பிடங்களுக்கு அருகிலுள்ள நூலகங்களைச் சிறந்த முறையில் தொடர்ந்து பயன்படுத்தி உருவானவர்களாவர்.

மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுப்பதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் பல்லாண்டு காலமாக நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன , ஒவ்வொரு வகுப்புக்கும் நூலகப் பாடவேளை வாரமொருமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பள்ளிகள் சிறப்பான முறையில் இப்பாட வேளையை செயல்படுத்தி வருகின்றன . எனினும் , சில இடங்களில் நூலகப் பாட வேளை மற்றும் பள்ளி நூலகங்களின் பயன் முறையாக மாணவர்களைச் சென்றடையாமல் இருப்பது தெரியவருகிறது. எனவே , பள்ளி நூலகங்களையும் பாட வேளைகளையும் முறையாகப் பயன்படுத்தவும் , அவற்றின் பயன் மாணவர்களை நன்கு சென்றடையவும் பாடநூல்களுக்கு வெளியே புத்தக வாசிப்பை ஒரு வாழ்வியல் முறையாக மாணவர்கள் கைகொள்வதை இலக்காகக் கொண்டு செயல்படவும் பார்வையில் கண்ட அரசுக் கடிதத்தில் அறிவுறுத்தியவாறு பின் வரும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.


No comments:

Post a Comment