Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 17, 2021

RTI மனுக்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் சுற்றறிக்கை.

RTI - பள்ளிக் கல்வி ஆணையரின் சுற்றறிக்கை :




துணை இயக்குநர் ( மின் ஆளுமை ) முழுக் கூடுதல் பொறுப்பு அலுவலராக பள்ளிக் கல்வி ஆணையரக நிர்வாக அலுவலர் செயல்பட்டு வரும் பிரிவில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் -2005 ன் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு பொதுத் தகவல் அலுவலர் என்ற முறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் தகவல்களை தகுந்த முறையில் அளிக்கப்பட வேண்டியதாக உள்ளது.

மாநில தகவல் ஆணையர் அவர்களின் நேரடி விசாரணையின்போது பள்ளிக் கல்வி துறையில் உருவாக்கப்பட்ட tn.schools இணையதளம் நாளதுநாள் வரை பராமரிப்பு ஏதுமின்றி எந்தவொரு தகவலும் , பதிவுருக்கள் , ஆவணங்கள் , குறிப்பாணைகள் , செய்தி வெளியீடுகள் , சுற்றறிக்கைகள் , ஆணைகள் , அரசு நலத்திட்ட உதவிகள் மாதிரிப் படிவங்கள் போன்ற பொது அதிகார அமைப்பின் மூலம் அணுகி பெறக்கூடிய தகவல் ஏதும் , இணையதளம் வழியாக வசதிகள் செய்யப்படவில்லை என தெரிவித்து உடனடியாக அனைத்துக் கல்வித் துறை சார்ந்த அலுவலக இணையதளம் மூலம் அணுகி தகவல்கள் பெற வசதிகள் செய்யப்பட வேண்டியது எனவும்.

மேலும் , கல்வித் துறை சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 19 ( 3 ) ன் கீழ் மேல்முறையீட்டு மனுக்கள் தகவல் ஆணையத்தில் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலான பொது அதிகார அமைப்பின் கீழ் செயல்படும் பொது தகவல் அலுவலர் விண்ணப்பம் பெற்ற 30 நாட்களுக்குள் அவ்விண்ணப்பத்திற்கு உரிய தகவல் அளிப்பது ( அல்லது ) பிரிவுகள் 8 மற்றும் 9 ல் குறிப்பிடப்பட்ட காரணங்களின் அடிப்படையில் நிராகரிப்பது பற்றி முடிவு செய்யப்பட வேண்டியது குறித்து சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்த பணிக்கப்பட்டுள்ளது . 4.பொது அதிகார அமைப்புகளின் கட்டுப்பாட்டிலுள்ள தகவல்களை எளிதாக அணுகி பெறத்தக்க வகையில் , திறன்மிகு செயல்பாட்டுடன் உள்ளடங்கிய தகுந்த முறையில் கையாண்டு பொதுநலன்கள் சார்ந்த தகவல் மனுதாரர்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் - 2005 - ன்கீழ் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி குறிப்பிட்ட காலத்திற்குள் சென்றடைய வேண்டும் என்பதால் கீழ்க்கண்டவாறு தாமதமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

No comments:

Post a Comment