Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, January 10, 2022

ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் வலுவூட்டல் பயிற்சி தொடர்பான இன்றைய பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

10.01.2022 முதல் கற்றல் விளைவுகள் சார்ந்த பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியினை வட்டாரத் தலைமையிடத்திலுள்ள உயர்நிலைப்பள்ளியினை மையமாகத் தெரிவு செய்துகொள்ள அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது சார்ந்து பின்வரும் கூடுதல் தகவல்கள் வழங்கப்படுகிறது:

பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாயின் முதன்மைக்கல்வி அலுவலர்கள் , அவ்வட்டாரத்திலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளை பயிற்சி மையங்களாகத் தெரிவு செய்து கொள்ளலாம். அதற்கேற்ப கருத்தாளர்களை நியமித்துக் கொள்ளவும் . பயிற்சிக்கான அறையில் ஒரு அறையில் 20 ஆசிரியர்களை மட்டுமே சமூக இடைவெளியைப் பின்பற்றி அமரச் செய்தல் வேண்டும். பெரிய அறையாக இருப்பின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஆசிரியர்களை அமரச் செய்தல் வேண்டும்.

பயிற்சி வளாகத்தில் கிருமிநாசினி பயன்படுத்துதல் மற்றும் முகக்கவசம் அணிந்திருத்தல் கட்டாயம் பின்பற்றப்படுதல் வேண்டும். ஒவ்வொரு நாளும் பயிற்சிக்கு வருகை தரும் போதே உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவியின் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதித்தல் வேண்டும்.

ஒவ்வொரு ஆசிரியரும் தமது பாடத்திற்கான இரண்டாம் நாள் பயிற்சியில் பங்கேற்கும் போது மட்டுமே , அப்பள்ளியிலுள்ள உயர்த்தொழில்நுட்ப ஆய்வகத்தை மதிப்பீடு மற்றும் பின்னூட்டம் அளிப்பதற்காக பயன்படுத்துவர். பயிற்சிக்கு காற்றோட்டமான வகுப்பறைகளை பயன்படுத்தவும். மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள் தவறாமல் பின்பற்றி சிறப்பான முறையில் பயிற்சியினை நடத்திட தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment