Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 1, 2022

டியூசன் நடத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை -நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


டியூசன் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வீடுகள் அல்லது சென்டர்களில் டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீதான புகார்களை தெரிவிக்க தனி வாட்அப் எண் உருவாக்கி விளம்பரப்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் குழுவை ஏற்படுத்தவும் சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,பிற அரசு அலுவலர்களுடன் ஒப்பிடும்போது அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வேலை நாள் மற்றும் நேரம் குறைவானது.இவ்வாறு இருக்க டியூசன் எடுப்பது ஆசிரியர் சமூகத்தில் புற்றுநோய் போல் பரவி வருகிறது என்றும் இது பணம் சம்பாதிக்கும் பேராசையை அதிகரிக்கிறது என்றும் உயர்நீதிமன்றக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

தனது பணியிட மாறுதலை எதிர்த்து ,தஞ்சையை சேர்ந்த ராதா என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இத்தகைய உத்தரவையும் கருத்தையும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment