JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
திருச்சி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தன்னை கண்டித்த ஆசிரியரை பள்ளி மாணவர் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் போன்று மீண்டும் நடைபெறாத வகையில் விரைவில் தனி உத்தரவு பிறப்பிக்கப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :
பெரியகுளம் சம்பவத்தை ஏற்கெனவே கண்டித்துள்ளோம். எங்களுக்கு மாணவர்களும் முக்கியம் , ஆசிரியர்களும் முக்கியம். இதுபோன்று மாணவர்கள் தவறு செய்யும்போது , அதைக் கண்டிக்கக்கூடிய வகையில்தான் எங்கள் செயல்பாடு இருக்கும். பெரியகுளத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று மீண்டும் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் , இதற்கென தனியாக உத்தரவு பிறப்பிக்கப்படும்.
பள்ளி மாணவர்கள் சீருடை அணிவது உட்பட பள்ளிக்கு எப்படி வர வேண்டும் என்பது குறித்து ஏற்கெனவே சுற்றறிக்கை உள்ளது. தமிழகத்தில் ஹிஜாப் பிரச்சினை இல்லை வேற்றுமையில் ஒற்றுமையை நாம் கடைபிடிக்கிறோம்.
அனைவரையும் சகோதரத்துவத்துடன்தான் பார்க்கிறோம் . ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அவர்களது கருத்துகளை காது கொடுத்து கேட்கிறோம். இதன் காரணமாகவே பிப் .28 - ம் தேதியுடன் முடிந் திருக்கவேண்டிய பணியிட மாறுதல் கலந்தாய்வு இன்னும் முடியவில்லை.
ஆசிரியர்கள் கூறும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment