Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 23, 2022

தமிழகத்தில் இனி இந்த தேர்வு இல்லை" - அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.அதன்படி,எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைரீதியாக அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

பாமக உறுப்பினர் வலியுறுத்தல்:

அந்த வகையில்,பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி பேசுகையில்,யுஜிசியானது மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வை நடத்துவதாக அறிவித்துள்ளது.ஆனால்,இதனை தமிழகத்தில் அனுமதிக்ககூடாது என்று வலியுறுத்தியிருந்தார்.

இனி நுழைவுத்தேர்வு அனுமதிக்கப்பட மாட்டாது:

இந்நிலையில்,தமிழகத்தில் இனி நுழைவுத்தேர்வு அனுமதிக்கப்பட மாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேரவையில் கூறுகையில்:

முதல்வர் எதிர்ப்பார்:

"தமிழகத்தில் நுழைவுத் தேர்வு எந்த உருவத்தில் நுழைய முயற்சித்தாலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அதை தீவிரமாக எதிர்ப்பார். எனவே,தமிழகத்தில் இனி நுழைவுத்தேர்வு அனுமதிக்கப்பட மாட்டாது.அதன்படி,பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்க மாட்டோம்.

No comments:

Post a Comment