Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, April 19, 2022

கிட்னி கெட்டுப்போனா ,வாழ்க்கையே கெட்டு போய்டும் ,கெடாமலிருக்க இதை கேட்டு வாங்கி சாப்பிட்டுங்க...

ரத்தத்தில் உள்ள கழிவுகளை அளவுக்கு அதிகமான நீரை பிரித்து சிறுநீராக வெளியேற்றும் பணியை சிறுநீரகம் செய்கிறது.

முதுகின் அடிபகுதியில் பீன்ஸ் விதை வடிவில் இருக்கும் இரண்டு சிறுநீரகங்களும் 10 முதல் 15 செ.மீட்டர் வரை உயரமும் 160 கிராம் எடையும் கொண்டவை. இந்த சிறுநீரகத்தில் ரத்தத்தை சுத்தம் நெஃப்ரான்கள் 10 இலட்சம் அளவு உள்ளது. இதில் தான் ரத்தகுழாய் வடிகட்டி உண்டு.

சிறுநீரகத்தில் ரத்தம் போகும் போது இவை வடிகட்டி கழிவுகளை ஒரு குழாய் வழியாக வெளியேற்றி தாது உப்புக்களை கிரகிக்கப்படுகிறது. இப்படி நாள் ஒன்றுக்கு தோராயமாக 190 முதல் 200 லிட்டர் ரத்தத்தை சுத்தம் செய்கிறது. சிறுநீரகம் இப்படி வெளியேற்றும் கழிவானது 1. 8 லிட்டர் அளவாக உள்ளது. இதன் பணிகள் சீராக செயல்படும் வரை பிரச்சனையில்லை. ஆனால் இவற்றில் தொய்வு ஏற்படும் போது சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.

எலுமிச்சை

மருத்துவ குணங்கள் நிறைந்த எலுமிச்சையில் வைட்டமின் சி இருப்பதால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது என்று உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். எலுமிச்சம்பழம் சிறுநீரகத்தை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி, சிறுநீரக நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

இஞ்சி

சிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் இஞ்சி பயனுள்ளதாக இருக்கும். இஞ்சியில் கால்சியம், அயோடின், இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை சிறுநீரகத்திலிருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன.

கொத்தமல்லி

கொத்தமல்லியில் மாங்கனீஸ், இரும்பு, மக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் புரதம் உள்ளது. கொத்தமல்லியின் அனைத்து பண்புகளும் சிறுநீரகத்தை சுத்தப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். கொத்தமல்லியை உணவில் சட்னி அல்லது சாலட் வடிவில் சேர்க்கலாம்.

சிவப்பு திராட்சை

சிவப்பு திராட்சையை உட்கொள்வது சிறுநீரகத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இதில் கனிமங்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் வைட்டமின் சி, பி6 மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. அதுமட்டுமின்றி இதில் இரும்பு, கால்சியம், ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தை சுத்தப்படுத்த உதவும்.

தயிர்

தயிரில் நல்ல அளவு புரோபயாடிக் பாக்டீரியா உள்ளது, இது சிறுநீரகத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. தயிரில் உள்ள மருத்துவ குணங்கள் செரிமானத்தை பலப்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. எனவே தயிரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment