JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் தொழில் துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அப்போது அரசு பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழத்தில் அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கால மாற்றத்துக்கு ஏற்ப அரசுத் துறையில் தற்போதிருக்கும் தேவையற்ற பணியிடங்கள் நீக்கப்பட்டு, தேவைப்படும் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், அரசுப் பணியாளர் துறையில் சீர்திருத்தங்களை மேகொள்வதற்காக அமைக்கப்பட்ட குழு சார்பில் இன்னும் 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதனடிப்படையில், புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்த அமைச்சர், ஜி.எஸ்.டி.யால் எதிர்பார்த்த அளவு வளர்ச்சியும் வரவில்லை, நிதியும் வரவில்லை. ஜி.எஸ்.டி.யை சீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் குறிப்பிட்டார் .
No comments:
Post a Comment