Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 26, 2022

வெள்ளை சாதம் சாப்பிடுவதை தவிர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!


பலரும் வெள்ளை சாதத்தை மூன்று வேளைகளும் சாப்பிடுவார்கள். ஆனால் இப்படி சாப்பிடுவது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
அதே போல இரவு நேரத்தில் சாதத்தை சாப்பிட வேண்டாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெள்ளை சாதத்தை முடிந்தளவு தவிர்த்தால் என்ன நடக்கும்?

இரத்த சர்க்கரை அளவு

சாதத்தை சாப்பிடாமல் இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். மேலம் அளவுக்கு அதிகமாக சாதத்தை உட்கொள்ளும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும்.

மலச்சிக்கல்

தினமும் அளவுக்கு அதிகமாக சாதத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கக்கூடும்.
 

ஊட்டச்சத்துக்கள்

கைக்குத்தல் அரிசியுடன் ஒப்பிடுகையில் வெள்ளை சாதத்தில் ஊட்டச்சத்துக்களானது மிகவும் குறைவாக உள்ளதால், இதனை அதிகம் எடுத்துக் கொள்வதால் எவ்வித சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப் போவதில்லை.

அலர்ஜி

நிறைய மக்களுக்கு வெள்ளை சாதமானது அலர்ஜியை ஏற்படுத்தும்.

உடல் எடை

உடல் எடையை குறைக்க வேண்டுமானால், குறைந்தது ஒரு மாதத்திற்கு வெள்ளை சாதத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனெனில் வெள்ளை சாதத்தில் அளவுக்கு அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளதால், உடலின் எடையானது இன்னும் அதிகரிக்கத் தான் செய்யும்.

No comments:

Post a Comment