Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 26, 2022

பொதுத்தேர்வு எழுதும் போது இவை கட்டாயம் - தேர்வுத்துறை உத்தரவு!


தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இதனால்,பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவுறுத்தியிருந்தார்

இதனிடையே,பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார்.இந்த சூழலில்,தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மே மாதம் பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் தற்போது செய்முறைத் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,பொதுத்தேர்வு எழுதும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment