Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 21, 2022

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்..அரசாணை வெளியீடு?.. வெளியான அதிரடி விளக்கம்.!!!

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் செயலாற்றி வருகின்ற ஊழியர்களுக்கு அரசு தரப்பில் பல வித சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அதில் முக்கியமான ஒன்றாக இருப்பது, ஓய்வூதிய திட்டம் ஆகும் . இந்நிலையில் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன், செயல்பட்டு வந்த திட்டத்தின் அடிப்படையில் அரசு பணியாளர்கள் தாங்கள் பணியில் இருக்கும் போது அவர்களது சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையானது பிடித்தம் செய்யப்பட்டு, அவை ஓய்வு பெற்றதும் ஓய்வூதிய தொகையாக அளிக்கப்படும்.

ஆனால், இந்த திட்டத்திற்கு மாற்றாக கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் புதிய பங்களிப்பு திட்டம் எனப்படும் CPS திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இத்திட்டத்தில் ஊழியர்களுக்கு, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய தொகையானது கிடையாது என்ற சூழலில், கடந்த சில ஆண்டுகளாகவே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் அதில் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் தமிழக அரசிற்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி, அரசு பணியாளர்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதை அடுத்து, கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியது. இதனை தொடர்ந்து அக்கடிதத்தின் பெயரில் வல்லுநர் குழுவானது அமைக்கப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, இந்த கடிதத்திற்கு பதில் தற்போது அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, 01.04.2003 என்ற தேதியிலோ அல்லது அதற்கு பிறகோ முறையான அரசு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புதிய ஓய்வு திட்டத்தினை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வு திட்டத்தினை செயலாற்றுவது குறித்து அரசிற்கு பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு அந்த பரிந்துரைகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு, ஓய்வூதிய திட்டத்திற்குரிய அரசாணைகளை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு தமிழக அரசுப் பணியாளர்கள் சங்கம் சமர்ப்பித்த கடிதத்திற்கு, அரசு சார்பு செயலாளர் பதில் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment