Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 26, 2022

வெந்தயம் ஊற வைத்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தீரும் நோய்கள்

வெந்தயம் ஊற வைத்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால் அசிடிட்டியில் இருந்து விடுபட உதவும்.

ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது. செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவராயின், வெந்தயம் ஊற வைத்த நீரைக் குடிப்பது இப்பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.

பார்ப்பதற்கு சிறு கற்கள் போல கரடு முரடாக இருக்கும் வெந்தயம், ஆனால் உண்மையில் இதில் அடங்கியுள்ள நன்மைகள் நம் உடலுக்கு எத்தகைய பயன்களை தரவல்லது என்பது நம்மில் குறைந்த அளவு மக்களே அறிந்திருப்போம்.

வீட்டின் அஞ்சறை பெட்டியில் இடம் பெரும் உணவுப் பொருட்களில் ஒன்று. அன்றாடம் நாம் சமையவில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் ஒவ்வொன்றிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அப்படி நாம் சேர்க்கும் ஒரு பொருள் தான் வெந்தயம். இன்றைய மோசமான உணவுப் பழக்கவழக்கத்தாலும், வாழ்க்கை முறையாலும் ஏராளமான நோய்கள் உடலை தாக்குகின்றன. முக்கியமாக உடலில் நச்சுக்களின் அளவும அதிகரிக்கிறது.

குறிப்பாக இரத்த குழாய்களினுள் கொழுப்புக்கள் படித்து இரத்த குழாய்களை அடைத்து, இதயத்திற்கு இரத்தம் செல்வதில் இடையூறு ஏற்பட்டு, இதய பிரச்சனைகள் மற்றும் மூளை பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

சர்க்கரை நோய்: சர்க்கரை நோயாளிகள் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். மேலும் ஆய்வுகளிலும் வெந்தயத்தை சாப்பிடுவதால் டைப்-2 நீரிழிவு பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வு கிடைப்பதாக தெரிய வந்துள்ளது.

மாரடைப்பு: வெந்தயம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது மாரடைப்பினால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுவதைத் தடுத்து நல்ல பாதுகாப்பு வழங்கும். இதற்கு வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.

புற்றுநோய்: ஆய்வுகளில் வெந்தயத்தில் உள்ள சக்தி வாய்ந்த சத்துக்கள், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவதாக தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள்.

மாதவிடாய் பிடிப்புகள்: வெந்தயத்தை பெண்கள் காலையில் எழுந்ததும் உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் வலி நிவாரணி பண்புகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புக்களைத் தடுக்கும்.

உடல் சூடு: கோடையில் உடலில் அதிகம் சூடு பிடிக்கும். இதனைத் தடுக்க தினமும் காலையில் வெந்தயத்தை சாப்பிட வேண்டும். இதனால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடல் சூடு பிடிப்பது தடுக்கப்படும்.

தாய்ப்பால் உற்பத்தி: பிரசவித்த பெண்கள் வெந்தயத்தை தினமும் உட்கொள்வதனால், தாய்ப்பாலின் உற்பத்தி அதிகரிக்கும். இதற்கு வெந்தயத்தில் உள்ள பைட்டோ-ஈஸ்ட்ரோஜென் தான் முக்கிய காரணம்.

கொலஸ்ட்ரால் குறையும்: ஆய்வுகளில் வெந்தயம் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. இதற்கு வெந்தயத்தில் உள்ள நரின்ஜெனின் என்னும் ஃப்ளேவோனாய்டு தான் காரணம். ஆகவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள்.

ஆர்த்ரிடிஸ்: இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் ஆர்த்ரிடிஸ் என்னும் எலும்பு மூட்டு வலி. இது கடுமையான வலியுடன், வீக்கத்துடனும் காணப்படும். ஆனால் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் உட்கொண்டு வருவதுடன் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வலியைக் குறைக்கும்.

செரிமானம்: செரிமான பிரச்சனைகள் ஏதும் நேராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதனால் செரிமான கோளாறுகள், வாய்வுத் தொல்லை போன்றவை நீங்குவதோடு, மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்றவைகளும் தடுக்கப்படும்.

எடை குறையும்: உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.

சிறுநீரக செயல்பாடுகள்: வெந்தயத்தில் உள்ள பாலிஃபீனோலிக் ஃப்ளேவோனாய்டுகள், சிறுநீரகங்களின் செயல்பாட்டை அதிகரித்து, சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும். எனவே சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிடுங்கள்.

கல்லீரல்: கல்லீரல் தான் உடலை சுத்தம் செய்கிறது. அத்தகைய கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால், உடல் முழுவதும் பாதிப்பிற்குள்ளாகும். கல்லீரல் முதலில் பாதிக்கப்படுவதற்கு ஆல்கஹால் முக்கிய காரணம். ஆனால் வெந்தயத்தை தினமும் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள பாலிஃபீனாலிக் உட்பொருட்கள் மதுவினால் கல்லீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்.

No comments:

Post a Comment