JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
நிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 - லிருந்து 60 ஆக உயர்த்தியது கடந்த அ.தி.மு.க. அரசு. அதைவிட மிக மோசமான நிதி நெருக்கடியிலும் வருவாய் பற்றாக் குறையிலும் தி.மு.க. அரசு சிக்கியிருப்பதால் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தலாமா என கோட்டையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஓய்வு பெற அனுமதிப்பதன் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசுக்கு தேவை 18,000 கோடி . இவர்களெல்லாம் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருப்பதால் அவர்களுக்கு பென்சன் வழங்க சுமார் 300 கோடி தேவை.
மேலும் புதிதாக ஆட்களை நியமிக்கும் போது அவர்களுக்கு சம்பளம் கொடுக்க கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் தேவைப்படும். ஆக , சுமார் 19,000 கோடி தேவை. அதனால் , ஓய்வு பெற அனுமதிக்காமல் 2 ஆண்டுகளுக்கு வயதை உயர்த்தி விட்டால் வருடத்துக்கு அவர்களுக்கு சம்பளமாக கொடுக்க 600 கோடிதான் தேவைப்படும்.
அதேசமயம் , ஆண்டுக்கு சுமார் 18,400 கோடி என 2 ஆண்டுகளுக்கு 36,800 கோடி ரூபாய் செலவினத்தை தவிர்க்க முடியும். அதனால் ஓய்வுபெறும் வயதை உயர்த்தலாமா என ஆலோசித் திருக்கிறது தி.மு.க. அரசு.
No comments:
Post a Comment