10ம் வகுப்பு, பிளஸ் 2 துணை தேர்வுவிண்ணப்ப பதிவு இன்று துவக்கம் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Monday, June 27, 2022

10ம் வகுப்பு, பிளஸ் 2 துணை தேர்வுவிண்ணப்ப பதிவு இன்று துவக்கம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வில், தேர்ச்சி பெறாதவர்களுக்கான, துணைத் தேர்வு விண்ணப்ப பதிவு இன்று துவங்குகிறது.

தமிழக அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் 20ம் தேதி வெளியிடப்பட்டன. பிளஸ் 1க்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு, ஜூலை 25 முதல் ஆக.,1 வரையிலும், பிளஸ் 1க்கு ஆக., 2 முதல் 10 வரையிலும், பத்தாம் வகுப்புக்கு ஆக.,2 முதல் 8 வரையிலும் துணைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், துணைத் தேர்வு எழுத, இன்று முதல் ஜூலை 4 வரை, ஞாயிறு தவிர மற்ற நாட்களில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, தாங்கள் படித்த பள்ளிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

மேற்குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பிக்காதவர்கள், ஜூலை 5 முதல் 7 வரை, கூடுதல் கட்டணம் செலுத்தி, தத்கல் சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப எண்ணை பாதுகாப்பாக வைத்திருந்து, அதை வைத்து ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.புதிதாக தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களும், அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 

ஏற்கனவே, பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கும், பிளஸ் 2வுக்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.தற்போது பிளஸ் 1 எழுதியவர்களுக்கு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி விபரம், இன்று அறிவிக்கப்படும்.துணைத் தேர்வு அட்டவணை மற்றும் விதிமுறைகளை,www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment

Post Top Ad