Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 20, 2022

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு.. முதலிடம் எந்த மாவட்டம் தெரியுமா..?

தமிழகத்தில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

இதில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழகத்திலேயே கன்னியாகுமரி மாவட்டம் 97.22% தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சியுடன் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

இதையடுத்து, 97.12 சதவிகித தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் இரண்டாவது இடமும், 95.96 சதவிகித தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் மூன்றாவது இடமும் பெற்றுள்ளது.

அதே நேரம், பத்தாம் வகுப்பில் 79.87% தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment