Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 8, 2022

பொறியியல் படிப்பிற்கு ஜூன் 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..ஆகஸ்ட் 16 முதல் கலந்தாய்வு

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு ஜூன் 20 முதல் ஜூலை 19 ஆம் தேதிவரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்விதுறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட்16ஆம் தேதி தொடங்கும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மாதம் 23ஆம் தேதி முடிவடைந்தது. விடைத்தாள்கள் திருத்தப்பட்டுள்ளன. ரிசல்ட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை எப்போது என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இணையதளம் மூலம் வரும் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் சிய பொன்முடி ஜூன் 20 முதல் ஜூலை 19 ஆம் தேதிவரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட்16ஆம் தேதி தொடங்கும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 22 முதல் பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

இணையதளத்தில் விண்ணப்பிக்க ஜூலை 19ஆம் தேதி கடைசி நாள். ஆகஸ்ட் 8ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் கூறினார். தொடர்ந்து ஆகஸ்ட் 16ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்றும் அமைச்சர் கூறனார். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு இந்த ஆண்டு 3 நாட்கள் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 7.5 சதவீத இட ஒதுக்கீடில் படித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 22லும் கவுன்சிலிங் துவங்கும் என்று கூறினார்.

நீட் நுழைவுத் தேர்வு முடிவு வந்த பிறகு தான் பொறியியல் படிப்புக்கு மாணவர் சேர்க்கை துவங்கும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார். முதல் 15 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் 7 நாட்களில் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment