Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, June 30, 2022

வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை! அரசு, தனியார் ஊழியர்களுக்கு தனி சட்டம்!

நாளை முதல் வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டுமே வேலை திட்டம் சில மாநிலங்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு இந்தியா முழுவதும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . அந்த வரிசையில் தற்போது இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை கூடிய அமல்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த விதிமுறைகளை தொடர்ச்சியாக பல்வேறு குழுக்களுடன் நீண்ட நாட்கள் பரிசீலித்து தொழிலாளர் நலன் குறித்த 4 முக்கிய திருத்தங்களை வெளியிட்டுள்ளது. ஆனால், இவற்றை முறைப்படி செயலாக்கம் செய்ய இன்னும் சில மாநிலங்கள் ஒப்புதல் தரவில்லை.


இந்தியாவில் இதுவரை உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அருணாசலப் பிரதேசம், ஹரியானா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், பீகார், இமாசலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள் நாளை ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிறுவனங்களில் ஊழியர்களின் பணி நேரம் 8 முதல் 9 மணி நேரமாக இருந்து வருகிறது. இந்த புதிய சட்ட திருத்தங்களின்படி, அதை 12 மணி நேரமாக அதிகரித்துக் கொள்ளலாம். அதை ஈடு செய்யும் வகையில் ஊழியர்களுக்கு 3 நாட்கள் வார விடுமுறை தினங்கள் அளிக்க வேண்டும். இதனால் தொழிலாளர்கள் ஒரு வாரத்தில் பார்க்கும் மொத்த வேலை நேரத்தில் மாறுதல் ஏற்படாது.

தற்போது பெரும்பாலான நிறுவனங்களில் தினசரி வேலை நேரம் 8 மணி நேரங்கள். வாரத்தில் 6 நாட்கள் பணி நாட்களாக இருப்பதால் வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்கிறார்கள். தற்போது ஒரு வாரத்தில் 1 நாள் மட்டுமே விடுமுறை உள்ளது.ஆனால் புதிய விதிமுறையின் படி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பணி நாளாக கொள்ளப்படும். ஊழியர்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 48 மணி நேரம் மட்டுமே பணியாற்றுவதற்கான வரம்பு அவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும். வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை எடுக்கும் ஊழியர்கள் 8 மணி நேர பணிக்குப் பதிலாக 12 மணி நேரம் பணிபுரியலாம்.

அதே போல், ஊழியர்கள் பெறும் சம்பளம் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு நிறுவனங்களின் பங்களிப்பு போன்றவற்றிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட உள்ளது. அடிப்படை சம்பளம், மொத்த சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்கும்.இனி வரும் காலங்களில் வருங்கால வைப்பு நிதிக்கு ஊழியர் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும். இதன் மூலம் தனியார் துறைகளில் சில ஊழியர்களுக்கு கையில் வாங்கும் சம்பளம் குறையவும் வாய்ப்பு உள்ளது.

அதாவது, இதன் மூலமாக பிஎஃப் திட்டத்துக்கு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் அளிக்கும் பங்களிப்பு தொகை உயரும். ஆனால் ஓய்வுக்குப் பின் பெறும் பணிக்கொடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். இதன் மூலம் ஓய்வுக்குப்பின் ஊழியர்கள் சிறப்பான வாழ்க்கை வாழலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment